ஹிஸ்புல்லாஹ் மக்களை தூண்டிவிடும் வகையில் செயற்படகூடாது....!

Thursday, 13 June 2019 - 11:01

%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81....%21

முஸ்லிம் மக்கள் அரபுகலாச்சாரத்தை மறந்து, இந்தநாடு அவர்களின் தாய்நாடு என்ற நாட்டுப்பற்றுடன் வாழப்பழக வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன்தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு இன்றைய தினம் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று தமிழருக்கு சார்பாக இந்திய வான்படை விமானங்கள் குறைந்தபட்சம் பருப்பு பொட்டலங்களையாவது கொண்டு வந்து யாழில் போட்டு ஜே.ஆர்ஜயவர்தனவை மிரட்டி பணியவைத்தன.

ஆனால் நேற்று மியன்மாரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இலட்சக்கணக்கில் அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டபோதும், இஸ்லாமிய நாடுகளிலேயே இந்த ஐஎஸ்பயங்கரவாதிகளாலேயே முஸ்லிம்மக்கள் கொல்லப்படும்போதும்,  உலகெங்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக இன்று அலைந்து திரியும் போதும், எந்தவொரு முஸ்லிம்நாடும் உதவ முன்வரவில்லை.

ஆகவே 'உலகில்பெரும்பான்மைதாமே' எனஉசுப்பேத்தும்பேச்சுபேசும் ஹிஸ்புல்லாஹ் இலங்கை முஸ்லிம்மக்களை ஆபத்தில்தான் தள்ளுகிறார்.

முதலில் இலங்கை முஸ்லிம்களை தமக்கு சமமான தம்மவர்களாக அரேபிய நாட்டு ஷேக்குகள் கருதுவது கூடகிடையாது. இதுதான் கசப்பான உண்மை.

ஆகவே அரபு கனவுலகை மறந்து இந்நாடு தான்தம் தாய்நாடு எனநினைத்து வாழப்பழக முஸ்லிம்கள் முன்வரவேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் வீரவசனம் பேசுவதை விட்டுவிட்டு உருப்படும் வழியை தேடவேண்டும்.

இந்த உசுப்பேத்தல் தொடர்ந்தால் மீண்டும் சஹ்ரான்கள் தோன்றி குண்டு வெடிப்புகளை நடத்தி நாட்டையும் முஸ்லிம் மக்களையும் ஆபத்தில் போடுவது திண்ணம் என அவர் கூறினார்.


காவல்துறை உப பரிசோதகர்  விளக்கமறியலில்
Tuesday, 04 August 2020 - 14:02

முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு... Read More

 தல்கம்பொல பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை
Tuesday, 04 August 2020 - 14:18

காலி - அக்மீமன - தல்கம்பொல பிரதேச விவசாய நிலைகளில் களைகளே... Read More

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
Tuesday, 04 August 2020 - 13:50

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை... Read More