Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...
Sunday, 16 June 2019 - 12:57
கொள்ளையிடச் சென்றவர் மீது துப்பாக்கி பிரயோகம்...
2,963

Views
ஹொரனை பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கொள்ளையிடச் சென்றபோது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர், தம்வசம் வைத்திருந்தது பிளாஸ்ரிக் துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹொரனை நகரின் பாணந்துறை வீதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கொள்ளையிடச் சென்றவர், காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

ஹொரனை காவல்துறை நிலையத்திற்கு அருகில் உள்ள குறித்த நிதி நிறுவனத்தில் இன்று காலை பாதுகாப்பு சமிக்ஞையில் இருந்து ஒலி எழுப்பப்பட்டதால், காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.

இதன்போது, அந்த நிதி நிறுவனத்தில் அத்துமீறி பிரவேசித்திருந்த ஒருவர், தன்வசம் வைத்திருந்த துப்பாக்கியை காவல்துறையினரை நோக்கித் திருப்பி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளத் தயாராகியுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், மற்றுமொரு அதிகாரியிடமிருந்த துப்பாக்கியை பயன்படுத்தி, கொள்ளையிட வந்தவரின் இடது காலில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, காயமடைந்தவர், மீமன - பொக்குனுவிட்ட பகுதியைச் சேர்ந்தவராவார்.
 
அவர், பயன்படுத்திய துப்பாக்கியை சோதனைக்கு உட்படுத்தியபோது, அது பிளாஸ்ரிக் துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
UPDATE............

ஹொரனை பாணந்துறை வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிடச் சென்ற ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
 
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது காயமடைந்த குறித்த சந்தேகத்துக்குரியவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.





 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top