Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
Sunday, 16 June 2019 - 13:55
இலங்கை அணி தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்..
3,117

Views
உலக்க கிண்ண கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை அணியின் வீரரோ அல்லது முகாமையாளரரோ  பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஊடக சந்திப்பில் எவரையும் பங்கேற்கச் செய்யாதிருக்க இலங்கை அணியின் முகாமைத்துவம் மேற்கொண்ட தீர்மானம் இதற்குக் காரணமாகும் எனக் குறிப்பிடப்படுகிறது.

உலகக் கிண்ணத் தொடரின் ஒவ்வொரு போட்டியின் இறுதியிலும் இடம்பெறும் பொதுவான ஊடக சந்திப்பிற்காக இரண்டு அணிகளும் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்பது சர்வதேச கிரிக்கட் பேரவையின் நியதியாகும்.

இந்த நிலையில், குறித்த ஊடக சந்திப்பில் எவரும் பங்கேற்காமை காரணமாக இலங்கை அணி, சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஏதாவது ஒரு தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top