Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...
Tuesday, 16 July 2019 - 15:47
கட்டிடம் இடிந்து வீழ்ந்து பலர் பலி...
3,873

Views
மும்பை - ஜனகீர்த்தி டொன்சிறி பகுதியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த கட்டிடத்தில் 40 முதல் 50 பேர் வரையில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பொழிகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கட்டிடத்திற்கு அருகில் செல்வது கடினம் என்பதால் தீ அணைப்பு வண்டி மற்றும் நோயாளர் காவு வண்டி கட்டிடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் உட்பட பலர் இறந்திருக்ககூடும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்த கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top