Hirunews Logo
%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+24+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...%21
Friday, 19 July 2019 - 13:22
உணவு விஷமானதால் 24 பேர் வைத்தியசாலையில்...!
1,490

Views
திருகோணமலை-புல்மோட்டை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 24 பேர் புல்மோட்டை தள வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வயிற்றுலைவு, வயிற்றோட்டம் மற்றும், வாந்தி என்பன காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புல்மோட்டை தக்வா நகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் உணவு உட்கொண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top