Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
Friday, 19 July 2019 - 16:56
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க விளக்கமறியலில்
1,313

Views
அவன் கார்ட் விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கங்கொடவில பதில் உத்தியோகபூர்வமற்ற நீதவான் சட்டத்தரணி திஸ்ஸ விஜேரத்னவின் உத்தரவினால் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றம் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய, குறித்த நீதவான் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு சென்று, சந்தேகத்துக்குரியவரை கண்காணித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 2 ஆம் திகதி சந்தேகத்துக்குரியவரை மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவன் கார்ட் விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்களான பாலித பெர்னாண்டோ, கருணாரத்ன பணடார மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர ஆகியோரும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top