நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Friday, 19 July 2019 - 20:03

++%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்றைய தினம் இது குறித்த கலந்துரைாடல் இடம்பெற்றது.

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.