கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது..

Sunday, 21 July 2019 - 16:51

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
நுவரெலிய பிரதேச வீடு ஒன்றில் சிற்றூந்து மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பிச் சென்ற இருவர்  காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

55 லட்சம் பெறுமதியான சிற்றூந்து மற்றும் 3 லட்சத்து 60 அயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கடந்த 16 ஆம் திகதி கொள்ளையடித்து செல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 மற்றும் 24 வயதுடைய வலல்லாவிட பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.