பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா..? சம்பள விபரம்..

Monday, 22 July 2019 - 9:14

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE..%3F+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D..
கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்பான கட்டத்தை அடையாத நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசன் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக ஏற்கனவே ஒரு வதந்தி பரவி வரும் நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

இயக்குனர் சேரனுக்கு மொத்தமாக பத்து லட்ச ரூபாய் சம்பளம் பேசியதாக தெரிகிறது.

அதேபோல் மோகன் வைத்யா, சரவணன், கவின், ஆகியோர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் சம்பளம் என்றும், அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்சி ஆகியோர்களுக்கு நாளொன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும், முகன், தர்ஷன் ஆகியோர்களுக்கு மொத்தமாக ஐந்து லட்ச ரூபாய் சம்பளம் என்றும் செய்திகள் கசிந்துள்ளது
 
ஆனால் இந்த செய்திகள் உண்மையானவை அல்ல என்றும் வதந்தி என்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இதனால் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என்றும் பிக்பாஸ் குழுவினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.