முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி!!

Monday, 22 July 2019 - 17:40

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%21%21

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரின் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ருசிகர தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் 800 விக்கெட்களுக்கு மேல் எடுத்து பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளனர்.

இதில் நடிகர் விஜய் சேதுபதி தான் முத்தையா முரளிதரனாக நடிக்க இருக்கிறாராம்.

இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பமாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இடம்பெறவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.