ரசிகர்களை மகிழ்விக்க துப்பாக்கி ஏந்திய தல..!

Saturday, 03 August 2019 - 14:06

%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2..%21+
திறமை இருந்தால் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் தல அஜித் என்பது நம்மில் பலர் அறிந்ததே..!

இந்தவகையில் அவருடைய திறமையை எடுத்துகாட்டும் வகையிலான அவரது இன்னொரு சாதனை பற்றிய தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

படங்களில் போன்றே நிஜத்திலும் உண்மையான ஹீரோவாக விளங்கி வரும் அஜித், கடந்த சில நாட்களாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இதற்கு காரணம் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே என்ற விடயம் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மாநில அளவிலான போட்டியில் தல அஜித் தெரிவாகியுள்ளதுடன் தேசிய அளவில் நடக்கவிருக்கும் துப்பாக்கி சுடும் போட்டியிலும் அஜித் கலந்து கொள்ள உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“நேர் கொண்ட பார்வை” திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியிலும் தல அஜித் வெற்றி பெற்றுள்ளதால் அவரது ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்...