விசேட தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்..

Tuesday, 06 August 2019 - 20:33

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4++%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
பாடசாலை விடுமுறையை முன்னிட்டு விசேட தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த விடுமுறை காலப்பகுதியில் சுற்றுலா மேற்கொள்ளும் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு குறித்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி இன்று முதல் எதிர்வரும்; செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் விசேட தொடருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அதேநேரம் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி நாளை மறுதினம் முதல் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விசேட தொடருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.