Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D...
Wednesday, 07 August 2019 - 7:38
நாட்டையே உலுக்கியுள்ள திடீர் மரணம்...
9,437

Views
முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் தனது 67 வது வயதில் காலமானார்.

அவர் சுகவீனமடைந்திருந்த நிலையில் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1952ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பிறந்த சுஷ்மா ஸ்வராஜ் வெளிவிவகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

சட்டத்தரணியான அவர் 1990 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1996 ஆம் ஆண்டில் இந்திய 11 வது மக்களவைக்கு தெரிவாகியுள்ளார்.

இதன்பின்னர் அவர் பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி முதல்வராக 1998 ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கிறார்.

அவர் இலங்கை விவகாரங்களிலும் தனது தலையீடுகளை மேற்கொண்டிருந்தார்.

என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்' என காஷ்மீர் விவகாரம் தொடர்பில் இறுதியாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் வேளையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top