Hirunews Logo
5+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
Wednesday, 07 August 2019 - 8:04
5 பேர் கைது...
8,001

Views
பெல்மடுளை பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் 3 கோடி ரூபா பெறுமதியான மாணிக்ககல், பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் ஆசிரியர்கள் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் அடங்குவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 28 ஆம் திகதி குறித்த நிறுவனத்திற்கு பிரவேசித்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான 604 மாணிக்ககற்களையும், 4 லட்சத்து 47 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 62 பவுண் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பெல்மடுளை காவற்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய ரத்தினபுரி காவற்துறை அத்தியட்சகரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் பலாங்கொடை, கிரிந்திவெல, லுணுகம்வேஹர மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top