இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை..

Wednesday, 07 August 2019 - 19:49

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..
இலத்திரனியல் கொடுக்கல் வாங்கலின் மூலம் இடம்பெறும் மோசடிகளை தடுப்பது குறித்து இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கலின் போது குறும்செய்திகளை அனுப்பவது கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் இதன்மூலம் இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் மோசடிகளை தடுக்க வாய்ப்பு ஏற்படும் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.