பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பதட்டம் ...

Thursday, 08 August 2019 - 8:37

+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+...
ஜம்மு -காஷ்மீர் விடயத்தை இந்தியா கையாளுகின்ற விதம் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்த வருவதாக அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கின் விசேட அந்தஸ்த்தை ரத்து செய்வதற்கான பிரேரணை அண்மையில் இந்திய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பதட்டம் அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் இந்தியாவுடனான ராஜதந்திர தொடர்பை குறைத்துக் கொண்ட பாகிஸ்தான், இந்திய தூதுவரையும் மீளழைத்துள்ளது.

அத்துடன் இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளையும் பாகிஸ்தான் இடைநிறுத்தியுள்ளது.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக புதிய அதிகார எல்லை மற்றும் ஆளுகை குறித்த இந்தியாவின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து அவதானித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.