Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D...
Tuesday, 13 August 2019 - 17:48
அனைத்து பாடசாலைகளிலும் வாரத்தில் ஒருநாள் ஆங்கிலத்தில் தொடர்பாடல்...
2,202

Views
மாணவர்களின் ஆங்கில மொழியிலான தொடர்பாடல் திறனை மேம்படுத்தும் விதமாக, வாரத்தில் ஒரு நாளை அனைத்து பாடசாலைகளிலும் தொடர்பாடல் தினமாக அறிமுகப்படுத்துவதற்கான யோசனையொன்றை கல்வியமைச்சு முன்வைத்துள்ளது.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி ஆங்கில தொடர்பாடல் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தி வகுப்பறை கற்றலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல் வழிகாட்டி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிகவும் பயனுள்ள பாடத்திட்டம், பாடப் புத்தகங்கள் மற்றும் பரீட்சை முறைமையொன்றினை உருவாக்க பரீட்சைத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவனம் மற்றும் கல்வி வெளியீட்டுத் துறை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top