Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81..
Tuesday, 13 August 2019 - 19:23
எரிபொருட்களின் விலைகள் அதிரடியாக உயர்வு..
12,366

Views
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும், ஒக்டைன் 95 ரக பெற்றோ லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எாிபொருட்களின் புதிய விலை விபரம்..

ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 138 ரூபாய்.

ஒக்டைன் 95 ரக பெற்றோ லீற்றர் ஒன்றின் புதிய விலை 163 ரூபாய்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை புதிய விலை 134 ரூபாய்

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top