Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%3F
Tuesday, 13 August 2019 - 19:24
கோட்டாபயவை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..?
118

Views
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவையும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்ன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தி இருந்தார்.

அவர் தவிர மேலும் பல கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top