Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
Tuesday, 13 August 2019 - 20:13
அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பு...
7,399

Views

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே தற்சமயம் சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகிறது.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இன்று மாலை இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top