Hirunews Logo
%E0%AE%90.%E0%AE%93.%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
Tuesday, 13 August 2019 - 20:38
ஐ.ஓ.சி எாிபொருட்கள் விலையும் உயா்வு
1,461

Views
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகியவற்றின் எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தபானத்துக்குட்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும் ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 136 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 138 ரூபாவிற்கும், 159 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 163 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதுவரை 131 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 134 என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டைன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என லங்கா ஐ.ஒ.சி அறிவித்துள்ளது.

இதற்கமைய 95 ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 166 ரூபாவிற்கும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 134 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top