Hirunews Logo
13%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 13 August 2019 - 20:42
13வது திருத்தத்திலுள்ள அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்
509

Views
அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள சகல அதிகாரங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று பெற்று கொடுக்கப்பட வேண்டும்.

அதற்கமைய 13வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

13 ஆம் திருத்தசட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் என்பன தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் சிங்கள மக்களின் பெரும்பான்மையான விருப்பத்தை பெற முடியும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top