Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
Wednesday, 14 August 2019 - 8:26
சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் பல இடங்கள் பாதிப்பு..
3,496

Views
சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நோர்வுட் - நிவ்வெளிகம தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டமையினால் 12 குடும்பங்களை சேர்ந்த 59 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் நோர்வுட் நிவ்வெளிகம தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கபட்டுள்ளதாக நோர்வுட் காவற்துறையினர் தெரிவித்தனர்.

அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட கினிகத்தேன நகரில் இரண்டு வர்த்த நிலையங்கள் மண்சரிவினால் பாதிக்கபட்டுள்ளன.

மேலும் ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளன.

இதேவேளைஇ வட்டவலை பகுதியில் பெய்த கடும் மலையின் காரணமாக வீடுகள் பல வெள்ள நீரில் முழ்கியுள்ளன.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் பெய்த கடும் மழையின் காரணமாக மஸ்கெலியா காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை - ஒல்டன் பகுதியில் உள்ள ஆறு ஒன்று பெருக்கெடுத்துள்ளது.

இதனால் பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், சாமிமலை - ஒல்டன் தோட்டத்தில் உள்ள பிள்ளையார் ஆலயமும் நீரில் முழ்கியுள்ளது.

அட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதோடு, மலையகத்தில் உள்ள நீர் தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

தலவாக்கலை  டெவன்போல் சென்கிளயார் மஸ்கெலியா மோகினி எல்லை ஆகிய நீர் வீழ்ச்சிகளின் நீர் அளவும் அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொழும்பு –பதுளை பிரதான வீதியில் ஹல்துமுல்லை, பெரகலை மற்றும் ஹப்புத்தளை பகுதிகளில் கடுமையான பனி சூழ்ந்து காணப்படுகின்றன.

இந்த பகுதியில் பயணிக்கும் போது வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு சாரதிகள் கோரப்பட்டுள்ளனர்.

அதேநேரம், நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு கட்டிட ஆய்வு நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் வசிக்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தென் மேற்கு பிராந்தியத்தில் காற்றும், மழையுடனான காலநிலையும் இன்றும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய மத்திய, சப்ரகமுவ, மேல் , வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top