12 பேர் விளக்கமறியலில்..

Wednesday, 11 September 2019 - 9:29

12+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..
பல தடவைகள் நிறுத்துமாறு சமிஞ்சை காட்டிய போதிலும் அதனை மீறி பயணித்த படகு ஒன்றிற்கு துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைதான இரண்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் 10 சிப்பாய்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
 
இதன்படி அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
கடந்த 28 ஆம் திகதி கொக்கிளாய் கடற்பகுதியில் பாதுகாப்பு நடமாடும் கடற்படை படகு சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கண்காணித்துள்ளது.
 
இதனையடுத்து அந்த படகை நிறுத்துமாறு பல தடவைகள் சமிஞ்சை காட்டப்பட்டுள்ளது.
 
எனினும் அதனை கருத்திற் கொள்ளாது அந்த படகு பயணித்துள்ளது.
 
இதன் பின்னர் சந்தேகமடைந்த கடற்படையினர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.