நாளைய தினம் முன்னிலையாக முடியாது....

Wednesday, 11 September 2019 - 12:45

+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81....
2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளைய தினம் முன்னிலையாக முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறியப்படுத்தியுள்ளார்.
 
ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
மன்னாரில் முன்னதாக திட்டமிட்பட்; சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர், நாளைய தினம் அங்கு செல்லவுள்ளதன் காரணமாக, நாளைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக இயலாது என பிரதமரின் செயலாளரினால் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கமைய, எதிர்வரும் 16ஆம் திகதி முற்பகல் 9.30க்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமருக்கு மீள் அறிவிதத்ல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.