சமய வழிபாடுகளில் கோட்டாபய...

Wednesday, 09 October 2019 - 13:20

%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையின் சமய வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.

குறித்த வழிபாடுகளில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் பங்குபற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இனங்களுக்கும் ஏற்ற சிறந்த ஆட்சியொன்றை வழங்குவார் என நாடாளுமன்ற  உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இஸ்லாமிய வழிபாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.