வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Wednesday, 09 October 2019 - 13:14

%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 70 மில்லிமீற்றர் தொடக்கம் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, புத்தளம் முதல் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் கடுமையான மழையுடன், மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.

இந்த நிலையில் குறித்த கடற்பிரதேசத்தின் ஊடாக பயணிக்கின்ற மீனவர்கள் மற்றும் கடற்பிரயாணிகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.