கொட்டுகொட வாகன விபத்தில் ஒருவர் பலி

Wednesday, 09 October 2019 - 13:35

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
சீதுவ-கொட்டுகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதோடு அவரது மனைவி பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியில் பயணித்த பாரவூர்தியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த உந்துருளி மீது மோதியதன் காரணமாக மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 64 வயதுடையவ கொட்டுகொட-நெதகமுவ பகுதியில் வசித்து வந்தரென காவல்துறையினர் தெரிவித்தனர்.