புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்பட உள்ளது..

Wednesday, 09 October 2019 - 15:58

+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை முற்பகல் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர்களுள் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை, அநுராதபுரத்தில் இடம்பெறும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டத்தில் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, வீரகுமார திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் அத்துரலிய ரத்தன தேரர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது உரையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, சகல பேதங்களையும் மறந்து தேசிய வேட்பாளரான, நாட்டின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தவறிழைக்காத அரசாங்கம் ஒன்றையும், தலைவர் ஒருவரையும் உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் உரையாற்;றிய ஸ்ரீலஙகா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, விவசாயகத்துக்கான கடனை மீன அறிவடாதிருக்க தமது அரசாஙகம் நடவடிக்கை எடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளப்பெருக்கினால் அழிவடைந்த விவசாய நிலங்களுக்காக இதுவரை வழங்கப்படாத நட்டஈடு, ஆறுமாத காலப்பகுதியில் வழங்கி நிறைவுறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

5 வருட காலமாக வீழ்ச்சிப் போக்கை சந்தித்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பவேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

இதற்காக பாடுபட்ட பல இராணுவத்தினர் சிறைச்சாலைகளில் உள்ளனர்.

அவர்களை நவம்பர் மாதம் 17ஆம் திகதி காலையில் அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுபான்மையினர்களின் அபிலாஷைகளை மனதில் வைத்துக்கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாhபய ராஜபக்ஷவை ஆதரவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.