கோட்டாபய ராஜபக்ஷவிற்கே ஆதரவு..

Wednesday, 09 October 2019 - 19:10

+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஜனநாயக மக்கள் காங்கிரஸின் மத்திய செயற்குழு நேற்று கூடி இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாக அந்த காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

தாங்கள் முன்வைத்த 20 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து இந்த முழுமையான ஆதரவு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.