மூன்று கரிமுத்துக்களுடன் இரண்டு பேர் கைது..

Wednesday, 09 October 2019 - 19:26

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
சாய்ந்தமருதில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று கரிமுத்துக்களுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னால் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 39 வயதுடைய குறித்த இருவரும் நேற்றிரவு 8 மணியளவில் கைதாகியுள்ளனர்.

சந்தேகத்துக்குரியவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.