பிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பு அமர்வு..

Wednesday, 09 October 2019 - 19:36

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81..
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பெளியேறும் ப்ரெக்ஸிட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக பிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பு அமர்வு ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பில் ஒரு முடிவை எட்டவேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை இந்த அமர்வை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒப்பந்தத்திற்கு இணக்கம் வெளியிடபபட்டால், அதனை அனுமதிப்பதற்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

இல்லாவிட்டால், வேறுவிதமான தெரிவுகளை முன்வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.