புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது..

Thursday, 10 October 2019 - 8:59

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் முற்பகல் 10 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இரண்டு கட்சிகளின் செயலாளர்கள் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிடவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அநுராதபுரத்தில் நேற்ற இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டத்தில் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, வீரகுமார திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் அத்துரலிய ரத்தன தேரர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது உரையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, சகல பேதங்களையும் மறந்து தேசிய வேட்பாளரான, நாட்டின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தவறிழைக்காத அரசாங்கம் ஒன்றையும், தலைவர் ஒருவரையும் உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.