அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்..

Thursday, 10 October 2019 - 9:01

+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கி தங்களது ஒழுங்குப் பத்திரத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தங்களது அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதிகாரம் இல்லாத போதும், அவ்வாறானதொரு அரசாஙகத்தையும்விட அதிகளவான செயற்பாடுகளை முன்னெடுத்து உரிமைகளைப் பாதுகாத்தது.

இந்த நிலையில், பிரதான விடயமான புதிய அரசியலமைப்பை இந்த முறை நிறைவேற்றிக் கொள்வதற்க அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது மக்கள் சந்திப்பு காலி முகத்திடலில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது