பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில்....இன்று மாலை முதல்

Thursday, 10 October 2019 - 10:09

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D....%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் குழு இன்று மாலை மீண்டும் கூடவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு இன்று மாலை 6 மணிக்கு நிதி அமைச்சில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றர் 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டிருந்தன .

அத்துடன் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவினாலும் விலையிறக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர்137 ரூபாவிற்கும் 95 ஒக்டெய்ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 161 ரூபாவிற்கும் தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்றன.

சுப்பர் டீசலின் தற்போதை விலை 132 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.