இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய கலந்துரையாடல் இன்று..

Thursday, 10 October 2019 - 9:28

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது.

கொட்டகலையில் மதியம் 12 மணியளவில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் கட்சியின் உப தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர், எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபையும், நிர்வாக சபையும் கூடி இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் என கட்சியின் உப தலைவர்களுள் ஒருவரான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.