முழுமையான தொடரையும் கைப்பற்றியது இலங்கை..

Thursday, 10 October 2019 - 9:40

+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..
சர்வதேச 20க்கு 20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியுடனான முழுமையான தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

லாஹுரில் நேற்றிரவு இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி, 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் ஓஷத பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இதையடுத்து, 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்விடைந்தது.

இந்த வெற்றியின்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற மூன்று 20க்கு 20 போட்டிகளிலும் வெற்றிபெற்று இலங்கை அணி தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

20க்கு 20 சர்வதேச கிரிக்கட் போட்டிகளில், தொடர் ஒன்றை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேநேரம், பாகிஸ்தான அணி 20க்கு 20 தொடர் ஒன்றை முழுமையாக இழந்த சந்தர்ப்பமும் இதுவாகும்.

பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இலங்கை அணியின் மூத்த வீரர்;கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இளம் அணி அங்கு சென்று 20க்கு 20 தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.