மாணவர்களை ஏற்றிசென்ற பேருந்து 40 அடி பள்ளத்தில் பாயந்தது - பலரின் நிலை கவலைக்கிடம்....!

Thursday, 10 October 2019 - 10:26

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+40+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D....%21
அம்பாறை - நவகிரியாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில் தனியார் பேருந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாகவும் இதில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விபரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.