கோட்டாபயவிற்கு நடந்தது என்ன - சிங்கப்பூரில் சிகிச்சை....!

Thursday, 10 October 2019 - 11:27

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+-+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88....%21
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.

இவர் இன்றைய தினம் சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ச சிகிச்சைக்காக பயணித்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவினை பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதி தேர்தலுக்கான 141 பொது கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அதில் 31 பொது கூட்டங்கள் பிரதான பொதுகூட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.