தொகுதி அமைப்பாளர்களை சந்தித்த சஜித் பிரேமதாச...

Thursday, 10 October 2019 - 13:40

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலருக்கும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் 37 தொகுதி அமைப்பாளர்கள் பங்கேற்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்துகொண்டமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் உட்பட தமது எதிர்கால தீர்மானம் தொடர்பில் அறிவிப்பதற்காக ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் இன்று பிற்பகல் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.