400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு

Thursday, 10 October 2019 - 13:41

400+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
மட்டக்களப்பில் உலக வங்கியின் அனுசரனையுடன் உலக விவசாய திட்டத்தின் கீழ் காலநிலைக்கு ஏதுவான விவசாய திட்டத்திற்கு  ஆயிரத்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் உலகவங்கி குழுவினர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது

இதன் அடிப்படையில், இந்தப் பணிகளுக்காக ஏறாவூர் பற்று தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சிறிய விவசாய அபிவிருத்தி திட்டமாக  முந்தனை ஆறு பகுதியிலுள்ள நீர்ப்பாசன குளங்கள் புனரமைத்தல்,  விவசாயிகளை வலுப்படுத்தல் முதலான திட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளன.

இந்த திட்டம் 5 வருடங்களில் நிறைவுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.