இரத்துச் செய்யப்பட்டுள்ள போட்டிகள்

Thursday, 10 October 2019 - 13:53

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஜப்பானில் இடம்பெறும் உலகக் கிண்ண ரக்பி தொடரில் எதிர்வரும் சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த இரண்டு போட்டிகள், ஹகிபிஸ் புயல் காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
 
இங்கிலாந்து மற்றும் ஃப்ரான்ஸ் அணிகளும், நியூஸிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கும் இடையிலான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், ஹகிபிஸ் புயல் காரணமாக குறித்த இரண்டு போட்டிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, போட்டி ஏற்பாட்டுக்குழு இன்று அறிவித்துள்ளது.
 
இந்தப் போட்டிகளுக்கு பதிலாக குறித்த அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மீளவும் நடைபெறமாட்டாது.
 
போட்டி விதிமுறைகளுக்கு அமைய, ஒவ்வொரு அணிக்கும் தலா இரண்டு புள்ளிகள் வீதம் வழங்கப்படும் என்றும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
 
இதேநேரம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டவாறு போட்டிகளை நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக ரக்பி உலகக் கிண்ண குழுத் தலைவர் எலன் கிளிபின்  தெரிவித்துள்ளார்.