துரைராசா ரவிகரனுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Tuesday, 22 October 2019 - 20:02

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+4%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 2ம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

மீனவர்கள் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் குறித்த அலுவலகம் சேதமாக்கப்பட்டது.

இதனை அடுத்து முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர்கள் முன்னதாககைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் பிற்போடப்பட்டது.