ரவிகரன் உள்ளிட்ட எழுவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு...!

Wednesday, 23 October 2019 - 9:32

%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ரீ . ரவிகரன் உள்ளிட்ட எழுவருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் எஸ்.லெனின்குமார் நேற்றைய தினம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முல்லைத்தீவு உதவி மீனவ பணியகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து ரவிகரன் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தினத்தன்று ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆர்பாட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை எனவும் இதனாலேயே ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் மீனவ பணியகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.