பொலிவியாவில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Friday, 08 November 2019 - 11:52

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஈவோ மொராலஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து, ஆளும் மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்கள் உருவாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் ஊழல் மோசடி இடம்பெற்றதாக எதிர்கட்சி ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் காவல்துறையினருக்கும் எதிர்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொலிவியாவின் வின்டோ நகரின் மேயர், எதிர்கட்சி ஆதரவாளர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு, சிவப்பு மை பூசப்பட்டதோடு அவரது முடியும் வெட்டப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் சில மணி நேரத்திற்கு பின் குறித்த மேயரை எதிர்கட்சி ஆதரவாளர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.