இலங்கை தொடர்பில் இந்தியா அவதானம்..!

Friday, 08 November 2019 - 12:55

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
இலங்கையில் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, எக்கொனமிக் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அண்டை நாடு என்ற அடிப்படையில் இலங்கையுடனான உறவு இந்தியாவிற்கு முக்கியப்படுகிறது.

எதிர்வரும் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கவுள்ளவர், இந்திய நலன் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.