சிறுமியிடம் முறையற்ற வகையில் நடந்த இரண்டு பேருக்கு விளக்கமறியல்...

Friday, 08 November 2019 - 13:05

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D...
மட்டக்களப்பு - ஆயித்தியமலை பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக முறையற்ற வகையில் நடத்திய குற்றத்துக்காக, அவரது சிறிய தந்தை உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஏறாவூர் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலை மாணவி, பாலியல் ரீதியாக முறையற்று நடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழு ஒன்று குறித்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளது.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் குறித்த சிறுமியை முறைகேடாக நடத்திய குற்றச்சாட்டில் மேலும் ஐந்து பேர் வரையில் தேடப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.