பேருந்தில் இருந்து வீழ்ந்து பலி

Friday, 08 November 2019 - 13:49

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
மாத்தறை முதல் பொலனறுவை நோக்கி சேவையில் ஈடுபடும் இலங்கை அரச போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் நடத்துனர் பேருந்தில் இருந்து வீழ்ந்ததில் உயிரிழந்தார்.

அகங்கம – ஹாத்தபெலேன பகுதியில் இந்த விபத்து சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த அவர் கராப்பிட்டிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் பலியான பேருந்து நடத்துடனர் பொலனறுவை – கந்துருவெல பகுதியைச்சேர்ந்த 46 வயதுடையவர் என குறிப்பிடப்படுகிறது.