மிகச்சிறந்த வெற்றியைப் பெறுவார்

Friday, 08 November 2019 - 20:36

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள சூழ்ச்சி தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தகவல் வெளியிட்டுள்ளார்.

பொலனறுவை – பெத்திவௌ பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ மிகச்சிறந்த வெற்றியைப் பெறுவார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

இந்த நிலையில், தனக்கு கிடைக்கும் இரண்டாவது வாக்கை கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லஹ் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய சஹ்ரானுடன் தொடர்புடைய எந்தவொரு அரசியல்வாதியின் ஆதரவை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஹிஸ்புல்லாஹ்வோ அல்லது அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய முஸ்லிம் அரசியல்வாதிகளை பயன்படுத்தி, இரண்டாவது வாக்கை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு கூறும் காணொளிகள் எதிர்காலத்தில் வெளியானால், அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என முன்கூட்டியே தாங்கள் கூறுவதாக விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அது தமது எதிர்த்தரப்பு அரசியல்வாதியின் திட்டமிட்ட செயற்பாடாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.