நேரடி வெளிநாட்டு முதலீடு...

Friday, 08 November 2019 - 20:37

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81...
தான் வினைத்திறன்மிக்க சக்தியைப் பயன்படுத்தி, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது வினைத்திறன்மிக்க சக்தியை பயன்படுத்தி வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்து அக்குரஸ்ஸ பகுதியில் மூன்று பொருளாதார அபிவிருத்தி வலையங்களை நிர்மாணிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இளைஞர்களுக்கான பல்வேறு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க முடியும் எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.